Back
LOCAL EVENTS
LOCAL EVENTS
குன்றத்து கோயிலில் பங்குனித் திருவிழா மார்ச் 23ல் கொடியேற்றம்
39 days ago
09 Mar 2026
திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பங்குனித் திருவிழா மார்ச் 23ல் கொடியேற்றத்துடன் துவங்குகிறது.
திருவிழா நடைபெறும் ஏப் 6வரை காலையில் தங்கப் பல்லக்கு, இரவில் தங்கமயில், தங்கக் குதிரை, வெள்ளி யானை, வெள்ளி பூதம், அன்னம், சேஷம் வெள்ளி ஆட்டுக்கிடாய், தங்கக் குதிரை, பச்சைக் குதிரை வாகனங்களில் தினம் ஒருவாகனத்தில் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை எழுந்தருளி வீதி உலா நிகழ்ச்சி நடைபெறும்.
முக்கிய நிகழ்ச்சியாக மார்ச் 28ல் கைபார நிகழ்ச்சி, மார்ச் 29ல் சைவ சமய ஸ்தாபித வரலாற்று லீலை, ஏப் 2ல் சூரசம்ஹார லீலை, ஏப் 3ல் பச்சை குதிரை ஓட்டம், பட்டாபிஷேகம், ஏப். 4ல் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை திருக்கல்யாணம், ஏப். 5ல் தேரோட்டம். ஏப் 6ல் தீர்த்த உற்ஸவம் நடக்கிறது.
Namma Madurai
Local News & Updates