Back
LOCAL EVENTS
LOCAL EVENTS
தோல்வி பயத்தில் ரூ.5 ஆயிரம் வழங்கிய தி.மு.க.; அ.தி.மு.க., ஆர்ப்பாட்டத்தில் விமர்சனம்
109 days ago
14 Feb 2026
மதுரை 'தோல்வி பயத்தில் தான் தி.மு.க. அரசு அவசர, அவசரமாக ரூ.5 ஆயிரத்தை மகளிர் வங்கி கணக்குகளில் செலுத்தியுள்ளது' என அ.தி.மு.க. புறநகர் கிழக்கு மாவட்ட செயலாளர் ராஜன் செல்லப்பா தெரிவித்தார்.
வேலை உறுதி திட்டத்தை சீர்குலைக்க தி.மு.க. முயற்சிப்பதை கண்டித்து ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் நேற்று அ.தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மதுரை கலெக்டர் அலுவலகம் அருகே நடந்த ஆர்ப்பாட்டத்தில் ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. பேசியதாவது மத்திய அரசு 100 நாள் வேலை உறுதி திட்டத்தை 125 நாட்களாக உயர்த்தி நல்ல திட்டத்தை கொண்டு வந்துள்ளது. இதற்கு மாநில அரசு 40 சதவீதம் நிதி கொடுக்க வேண்டும். அதை தி.மு.க.வால் கொடுக்க முடியாதா. பழனிசாமி கொடுத்த அழுத்தத்தால் தான் மகளிர் உரிமை திட்டத்தில் மாதம் ரூ1000ஐ தி.மு.க. வழங்கி வருகிறது. அக்கட்சிக்கு தோல்லி பயம் வந்துவிட்டது. அதனால் தான் முன்கூட்டியே ரூ5 ஆயிரம் தந்துள்ளது. 5 ஆண்டுக்கும் சேர்த்து ரூ.1 லட்சம் கொடுத்து இருக்கலாம். பெண்கள் ஒரு பவுன் தங்க நகை வாங்கி இருப்பார்கள். இவ்வாறு பேசினார். அதி.மு.க. ஒன்றிய செயலாளர்கள் கணேசன், சேனாபதி, கார்த்திகேயன், கூட்டணி கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.
திருப்பரங்குன்றம் இளைஞரணி மாநில துணைச் செயலாளர் பாரி, மாவட்ட செயலாளர் ரமேஷ், ஒன்றிய செயலாளர் முருகன், மாவட்ட துணைச் செயலாளர் ஓம் சந்திரன், நிர்வாகிகள் செல்வக்குமார், பாலமுருகன், பாலா பங்கேற்றனர்.
மேலூர் எம்.எல்.ஏ. பெரியபுள்ளான், ஜெ. பேரவை செயலாளர் தமிழரசன், வடக்கு, தெற்கு ஒன்றிய செயலாளர்கள் பொன்னுச்சாமி, பொன், ராஜேந்திரன், கொட்டாம்பட்டி தெற்கு ஒன்றிய செயலாளர் வெற்றிச்செழியன், அவைத்தலைவர் எஸ்.என். ராஜேந்திரன், அண்ணா தொழிற்சங்க மாவட்ட செயலாளர் ஜபார், நகர் செயலாளர் சரவணகுமார், பா.ஜ. துணைத்தலைவர் கண்ணன், சிந்தனை பிரிவு தலைவர் சேவுகமூர்த்தி,அ.ம.மு.க. அமைப்பு செயலாளர் சரவணன், நிர்வாகி ஆசையன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

சோழவந்தான் ஒன்றிய செயலாளர் கணேசன் தலைமை வகித்தார். மாவட்ட இளைஞரணி இணைச் செயலாளர் மணி வரவேற்றார். ஜெ. பேரவை நிர்வாகிகள் ராஜேஷ் கண்ணா, தர்மர், மாவட்ட பிரதிநிதி மணி, பா.ஜ. மண்டல் தலைவர் கதிர்வேல், அ.ம.மு.க. ஒன்றிய செயலாளர் ராஜன் முன்னிலை வகித்தனர். நிர்வாகிகள் முருகேசன், ராஜபாண்டி, ராமு, வழக்கறிஞர் காசிநாதன், கணேசன் உட்பட பலர் பங்கேற்றனர்.
அலங்காநல்லுார் ஒன்றிய செயலாளர் ரவிச்சந்திரன் தலைமை வகித்தார். பா.ஜ. தேசிய பொதுக்குழு உறுப்பினர் பழனிவேல்சாமி, மாவட்ட துணைத் தலைவர் கோவிந்தமூர்த்தி, அ.ம.மு.க. ஒன்றிய செயலாளர் கோடீஸ்வரன் முன்னிலை வகித்தனர். நகர செயலாளர் அழகுராஜா வரவேற்றார். முன்னாள் எம்.எல்.ஏ. மாணிக்கம் பேசினார்.
குமாரத்தில் ஒன்றிய செயலாளர் ராதாகிருஷ்ணன் தலைமை வகித்தார். அ.ம.மு.க. ஒன்றிய செயலாளர் செல்வம், பா.ஜ. மண்டல் தலைவர் கணேசன், மாவட்ட செயலாளர் ஜெயபாண்டி முன்னிலை வகித்தனர். முன்னாள் எம்.எல்.ஏ. கருப்பையா பேசினார்.
உசிலம்பட்டி செல்லம்பட்டியில் முன்னாள் எம்.எல்.ஏ. தவசி தலைமையில் ஒன்றியச் செயலாளர் ராஜா, பா.ஜ. அ.ம.மு.க., ஒன்றிய நிர்வாகிகள் பங்கேற்றனர். டி.கல்லுப்பட்டி சட்டசபை எதிர்க்கட்சி துணைத்தலைவர் உதயகுமார் தலைமையில் நிர்வாகிகள் ராமசாமி, டாக்டர் பாவடியான், வழக்கறிஞர் பாஸ்கரன், கணேசன் கலந்து கொண்டனர்.

Namma Madurai
Local News & Updates