மதுரை: மதுரை மாவட்டத்தில் விவசாயிகள் 1 லட்சத்து 25 ஆயிரத்து 62 பேர் உள்ளனர். இதில் 89 ஆயிரத்து 466 பேர் பிரதம மந்திரியின் தனித்துவ அடையாள எண் பெற்றுள்ளனர். மாவட்டத்தில் இன்னும் 35,596 பேர் பெறாமல் உள்ளனர். பிரதம மந்திரி கிசான் திட்டத்தின் கீழ் கவுரவ நிதி பெற தனித்துவ அடையாள எண் அவசியம் என்பதால் விவசாயிகளுக்கு பதிவு செய்ய வசதியாக பிப்.24 வரை சிறப்பு முகாம் நடக்கிறது.
விவசாயிகள் தங்கள் நிலத்தின் கணினி சிட்டா, ஆதார் எண், ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட அலைபேசி எண்ணுடன் இ-சேவை மையம், வட்டார வேளாண் உதவி இயக்குநர் அலுவலகங்களை தொடர்பு கொண்டு பதிவு செய்யலாம் என மாவட்ட வேளாண் இணை இயக்குநர் முருகேசன் தெரிவித்துள்ளார்.
Namma Madurai
Local News & Updates