Back
Local Events
Local Events
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் செப்.23 வரை இலவச தரிசனம்
21 Sep 2026
21 Sep 2026
மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலில் 17 ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த செப்டம்பர் 17-ஆம் தேதி மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. கும்பாபிஷேகத்தைத் தொடர்ந்து பக்தர்கள் சிரமமின்றி தரிசனம் செய்யும் வகையில் செப்டம்பர் 17 முதல் 20-ஆம் தேதி வரை கட்டணமில்லா தரிசனம் அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது பக்தர்களின் வருகை தொடர்ந்து அதிகரித்து வருவதால், இலவச தரிசன வசதி செப்டம்பர் 23-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
கும்பாபிஷேகத்துக்குப் பிறகு மதுரை மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் கோயிலுக்கு வந்து வருகின்றனர். குறிப்பாக அதிகாலை முதலே பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து அம்மனையும் சுந்தரேசுவரரையும் தரிசனம் செய்து வருகின்றனர். செப்டம்பர் 20-ஆம் தேதி மட்டும் சுமார் 72,000 பக்தர்கள் தரிசனம் செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பக்தர்கள் கூட்டத்தை கருத்தில் கொண்டு, அனைவரும் எளிதாக தரிசனம் செய்யும் வகையில் கட்டண தரிசனத்தை ரத்து செய்து மேலும் மூன்று நாட்களுக்கு இலவச தரிசனம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால் உள்ளூர் மற்றும் வெளியூர் பக்தர்கள் செப்டம்பர் 23 வரை எந்தவித தரிசனக் கட்டணமும் செலுத்தாமல் கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய முடியும். கூட்ட நெரிசலை சமாளிக்க கோயில் நிர்வாகம் சார்பில் தேவையான ஏற்பாடுகளும் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
Namma Madurai
Local News & Updates