Namma Madurai App
மதுரையில் கோலாகலம் 17 ஆண்டுகளுக்கு பிறகு இன்று மீனாட்சி கோயில் கும்பாபிஷேகம்
Back Local Events
Local Events

மதுரையில் கோலாகலம் 17 ஆண்டுகளுக்கு பிறகு இன்று மீனாட்சி கோயில் கும்பாபிஷேகம்

17 Sep 2026 17 Sep 2026

Share this story

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் 17 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று (செப்டம்பர் 17) காலை மகா கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது. காலை 7.40 மணியளவில் அம்மன் மற்றும் சுவாமி தங்க விமானங்கள், ராஜகோபுரங்களுக்கு புனிதநீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து அம்மன் சன்னதிக்கு காலை 7.55 மணிக்கும், சுவாமி சன்னதிக்கு காலை 8.10 மணிக்கும் கும்பாபிஷேகம் நடைபெற்றது.
கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கோயில் மற்றும் சுற்றுப்புறப் பகுதிகளில் விரிவான பாதுகாப்பு மற்றும் அடிப்படை வசதிகள் செய்யப்பட்டிருந்தன. சுமார் 6,500 போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். பக்தர்களுக்காக 203 குடிநீர் தொட்டிகள், தற்காலிக கழிப்பறைகள், மருத்துவ மையங்கள் மற்றும் ஆம்புலன்ஸ் வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. மேலும், வெளியூர்களில் இருந்து வரும் பக்தர்களின் வசதிக்காக 650 சிறப்பு பேருந்துகள் மற்றும் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டன.
17 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெற்ற இந்த முக்கிய நிகழ்வை காண லட்சக்கணக்கான பக்தர்கள் மதுரைக்கு வருகை தந்தனர். நகரம் முழுவதும் அலங்கார விளக்குகளால் விழாக்கோலம் பூண்டிருந்தது. கூட்ட நெரிசலைக் கண்காணிக்க 448 கண்காணிப்பு கேமராக்கள் பயன்படுத்தப்பட்டதுடன், 51 இடங்களில் மெகா திரைகள் மூலம் கும்பாபிஷேகத்தை பக்தர்கள் காண ஏற்பாடு செய்யப்பட்டது. கும்பாபிஷேகம் நிறைவடைந்ததைத் தொடர்ந்து காலை 10 மணிக்குப் பிறகு பொதுமக்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட உள்ளனர்.

Namma Madurai

Local News & Updates

More News