Namma Madurai App
மதுரையில் முக்குறுணி விநாயகருக்கு கொழுக்கட்டை இல்லை!
Back Local Events
Local Events

மதுரையில் முக்குறுணி விநாயகருக்கு கொழுக்கட்டை இல்லை!

03 Sep 2026 03 Sep 2026

Share this story

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் உள்ள பிரசித்தி பெற்ற முக்குறுணி விநாயகருக்கு விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு ஆண்டுதோறும் பிரம்மாண்டமான கொழுக்கட்டை படைக்கப்படுவது வழக்கம். இந்த கொழுக்கட்டை சுமார் 18 படி அரிசி, 2 படி பருப்பு, 75 கிலோ வெல்லம் உள்ளிட்ட பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்படும் சிறப்புடையது.
ஆனால், இந்த ஆண்டு கோயிலில் நடைபெறவுள்ள குடமுழுக்கு விழா ஏற்பாடுகள் காரணமாக முக்குறுணி விநாயகருக்கு வழக்கமான பிரம்மாண்ட கொழுக்கட்டை படையல் நடைபெறாது என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதனால் பக்தர்கள் மத்தியில் இந்த ஆண்டு கொழுக்கட்டை தரிசனம் கிடைக்காதது குறித்த எதிர்பார்ப்பும் கவலையும் ஏற்பட்டுள்ளது.
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலின் முக்கிய பாரம்பரிய நிகழ்வுகளில் ஒன்றாக பார்க்கப்படும் இந்த முக்குறுணி விநாயகர் கொழுக்கட்டை, பக்தர்களை பெரிதும் ஈர்க்கும் நிகழ்வாகும். குடமுழுக்கு பணிகள் நிறைவடைந்த பின்னர் வழக்கமான திருவிழா மற்றும் படையல் நிகழ்வுகள் மீண்டும் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Namma Madurai

Local News & Updates

More News