Namma Madurai App
மீனாட்சி கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் இயக்கம்
Back LOCAL EVENTS
LOCAL EVENTS

மீனாட்சி கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் இயக்கம்

12 Sep 2026 12 Sep 2026

Share this story

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் செப்டம்பர் 17-ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், பக்தர்களின் வசதிக்காக சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. கும்பாபிஷேகத்தில் பங்கேற்க பல்வேறு பகுதிகளில் இருந்து அதிகளவில் பக்தர்கள் மதுரைக்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதால், பயணிகளின் கூட்ட நெரிசலைக் குறைக்கும் வகையில் தெற்கு ரயில்வே கூடுதல் ரயில் சேவைகளை அறிவித்துள்ளது.
சென்னை சென்ட்ரல்–மதுரை இடையே செப்டம்பர் 16-ஆம் தேதி மாலை 4.10 மணிக்கு சிறப்பு எக்ஸ்பிரஸ் ரயில் புறப்பட்டு, செப்டம்பர் 17-ஆம் தேதி அதிகாலை 4.30 மணிக்கு மதுரையை வந்தடையும். அதேபோல், தாம்பரம்–மதுரை இடையே செப்டம்பர் 16-ஆம் தேதி இரவு 9.40 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில், செப்டம்பர் 17-ஆம் தேதி காலை 5 மணிக்கு மதுரையை சென்றடையும். இதனால் கும்பாபிஷேக நாளில் அதிகாலையிலேயே மதுரையை அடைய பக்தர்களுக்கு வசதி ஏற்படும்.
மேலும், சென்னை கடற்கரை–மானாமதுரை இடையே சிறப்பு மெமு ரயிலும் இயக்கப்பட உள்ளது. இந்த ரயிலில் 12 முன்பதிவில்லா பெட்டிகள் இணைக்கப்பட உள்ளன. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு இயக்கப்படும் சிறப்பு ரயில்கள் மூலம் பக்தர்கள் பாதுகாப்பாகவும் சிரமமின்றியும் மதுரைக்கு வந்து விழாவில் பங்கேற்க முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Namma Madurai

Local News & Updates

More News