Add Listing
போராட்ட

போராட்ட பிரசாரம்

  • 10 Feb 2026
  • 264
  • LOCAL EVENTS

மேலுார்: மேலூரில் சி.ஐ.டி.யு, ஏ.ஐ.டி.யு,சி, விவசாய சங்கம் உள்பட அனைத்து தொழிற்சங்கம் சார்பில் பிப். 12 மறியல் போராட்டம் நடைபெற உள்ளது.

கீழவளவில் போராட்டம் குறித்து நடந்த பிரசார கூட்டத்திற்கு நிர்வாகி திலகர் தலைமை வகித்தார். மேலூரில் சி.ஐ.டி.யு, நிர்வாகி மணவாளன் தலைமையில் துண்டு பிரசுரம் வழங்கப்பட்டது. இதில் தொழிலாளர் விரோத சட்டத்தை அமல்படுத்த கூடாது. விதை சட்டத்தை ரத்து செய்ய வேண்டும். மின்சார ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை கைவிடுவது உள்ளிட்ட 5 அம்ச கோரிக்கைகள் குறித்து பிரசாரம் செய்யப்பட்டது.

தொழிற்சங்க நிர்வாகிகள் சேகர், ஜீவானந்தம், மதிவாணன், அடக்கி வீரணன், மெய்யர் பங்கேற்றனர். நிர்வாகி பிரான்மலை நன்றி கூறினார்.