பெண் விவசாயிகள் கருத்தரங்கு
- 20 Feb 2026
- 264
- LOCAL EVENTS
மதுரை: மதுரை சமுதாய அறிவியல் கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில், அகில இந்திய பெண்கள் விவசாய ஆராய்ச்சி திட்டம் சார்பில் பெண் விவசாயிகளை தொழில்நுட்ப ரீதியாக மேம்படுத்துவது குறித்த கருத்தரங்கு நடந்தது. பேராசிரியை விஜயலட்சுமி வரவேற்றார்.
டீன் காஞ்சனா தலைமை வகித்தார். மைசூர் விஞ்ஞானி ராம் ராஜசேகரன், புவனேஸ்வர் ஐ.சி.ஏ.ஆர், திட்ட இயக்குநர் மிருதுளா தேவி சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர். விவசாய கல்லுாரி டீன் பொறுப்பு சந்திராமணி உட்பட பலர் பங்கேற்றனர். பேராசிரியர்கள் செல்வி, ராஜதுரை, நாகஜோதி, ஹேமலதா தலைமையில் விவசாயம், தோட்டக்கலை, கால்நடை துறை, உணவுப்பதப்படுத்துதலில் பெண் விவசாயிகளின் பங்கு குறித்து விவாதம் நடந்தது. முதுநிலை விஞ்ஞானி சரவணகுமார் நன்றி கூறினார்.
Add Listing