மகளிருக்கு ரூ.1.09 கோடி கடனுதவி வழங்கல்
- 17 Feb 2026
- 264
- LOCAL EVENTS
மதுரை: மதுரை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் பழங்காநத்தம் கிளையில், தனி நபர் பாதுகாப்பு பெட்டக பிரத்யேக சேவை வசதியையும், செக்கானுாரணியில் புதிய கிளை, ஏழு சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.1.09 கோடி கடனுதவி வழங்கும் விழா நடந்தது.
செக்கானுாரணியில் நடந்த விழாவிற்கு கலெக்டர் பிரவீன் குமார் தலைமை வகித்தார்.
மண்டல இணைப்பதிவாளர் சதீஷ்குமார், மேலாண் இயக்குனர் வாஞ்சிநாதன் உட்பட பங்கேற்றனர்.
Add Listing