மதுரை: ஜூனியர் உலகக் கோப்பை ஹாக்கி போட்டிக்கான ஆய்வு
- 15 Oct 2025
- 264
- SPORTS NEWS
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் நவம்பர் 28-ல் துவங்கவிருக்கும் ஜூனியர் உலகக் கோப்பை ஹாக்கி போட்டியை முன்னிட்டு, மதுரை ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் ஹாக்கி அரங்கின் ஆய்வு நடைபெற்றது. ஹாக்கி இந்தியா செயலாளர் போலோநாத் சிங் மற்றும் தமிழ்நாடு ஹாக்கி சங்கத் தலைவர் சேகர் நேரில் சென்று அரங்க பணிகளை பரிசீலித்தனர்.
மாவட்ட விளையாட்டு அலுவலர் ராஜா தலைமையிலான நிர்வாகிகள் மற்றும் போட்டி நிர்வாகிகள் விக்ரம், பூஷன் ஆகியோர் அரங்கத்தை ஆய்வு செய்தனர். ஆய்வின் போது, போலோநாத் சிங் மற்றும் சேகர் தெரிவித்ததாவது, அரங்கத்தில் ஏற்கனவே இருந்த செயற்கை புல்வெளி (டர்ப்) அகற்றப்பட்டு, சர்வதேச தரத்திற்கு ஏற்ப புதிதாக அமைக்கப்பட்டுள்ளதாகும். போட்டி பார்வையாளர்கள், வி.ஐ.பி., மற்றும் வீரர்கள் வசதியாக அமர்வது கண்டு, மூன்று வகை கல்லரிகள், கழிப்பறைகள், போட்டி நடுவர்கள் மற்றும் வீரர்களுக்கான அறைகள், உடை மாற்றும் அறைகள் அனைத்தும் தயாராகி வருகின்றன.
தமிழகத்தில் முதன்முறையாக நடக்கும் ஜூனியர் உலகக் கோப்பையில் 24 நாடுகளைச் சேர்ந்த அணிகள் 72 போட்டிகளில் பங்கேற்கின்றன. இதில், மதுரையில் 12 நாடுகள் மற்றும் சென்னையில் 12 நாடுகள் போட்டிகளை நடத்த உள்ளன. தென் தமிழகம் ஹாக்கி விளையாட்டுக்குப் பெயர் பெற்ற இடம் என்பதால், துணை முதல்வர் உதயநிதி வேண்டுகோளுக்கிணங்க, டிசம்பர் 3-ஆம் தேதி இந்திய அணி நடக்கும் ஒரு முக்கிய போட்டியை மதுரையில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. மொத்த 72 போட்டிகளில் மதுரையில் 34 லீக் போட்டிகள் நடக்கவுள்ளன. அரையிறுதி மற்றும் இறுதி போட்டிகள் சென்னையில் நடைபெறும் என்று அவர்கள் தெரிவித்தனர்.
Add Listing