அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் "டிஜிட்டல் பேமென்ட்"
- 11 Mar 2025
- 264
- HEALTH NEWS
அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் ஸ்கேன் பரிசோதனை செய்வதற்கான கட்டணத்தை 'டிஜிட்டல் பேமென்ட்' முறையில் மட்டும் செலுத்த தமிழ்நாடு மருத்துவ சேவை கழகம் (டி.என்.எம்.எஸ்.சி.,) உத்தரவிட்டுள்ளதால் ரொக்கமாக பணத்துடன் வரும் நோயாளிகள் பரிதவிக்கின்றனர்.
மாவட்ட தலைமை அரசு மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு எம்.ஆர்.ஐ., சி.டி.ஸ்கேன் பரிசோதனை செய்வதற்கு டி.என்.எம்.எஸ்.சி., கட்டணம் நிர்ணயித்துள்ளது.பெரும்பாலான நோயாளிகள் ரொக்கமாக பணம் செலுத்தி பரிசோதனை செய்து வந்த நிலையில் டி.என்.எம்.எஸ்.சி., புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது. இதன் படி கியூ.ஆர். கோடு, ஜிபே, போன்பே மூலம் மட்டும் 'டிஜிட்டல்' இணையதளத்தில் பணத்தை செலுத்த வேண்டும் என தெரிவித்துள்ளது. நோயாளிகளிடம் இருந்து ரொக்கமாக பணம் பெற மறுக்கின்றனர்.
பெரும்பாலும் கிராமப்புறங்களில் இருந்து வரும் நோயாளிகள் வலியும், அவஸ்தையும் தாங்காமல் கேஷியர்களுடன் வாக்குவாதம் செய்கின்றனர். இதனால் ஸ்கேன் எடுப்பதும் தாமதமாகிறது.