Add Listing
மதுரை

மதுரை மீனாட்சியம்மன் தெப்பத்திருவிழா: சுவாமியும் அம்மனும் மின்னொளி தெப்பத்தில் வலம்வந்த கண்கொள்ளா காட்சி

  • 02 Feb 2026
  • 264
  • LOCAL EVENTS

மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயிலின் தெப்பத்திருவிழா உலகபிரசிதிபெற்ற மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயிலின் தெப்பத்திருவிழா கடந்த ஜனவரி 21 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனை தொடர்ந்து தினமும் காலை, மாலை இரு வேளைகளிலும் தங்கச்சப்பரம், அன்னம், காமதேனு, சிம்ம வாகனம், குதிரை, ரிஷபம், யாளி, பல்லக்கு உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் சுவாமியும், அம்மனும் எழுந்தருளி சித்திரை வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். இதனை தொடர்ந்து விழாவின் சிகர நிகழ்வாக தைப்பூதச தினமான இன்று காலை தெப்பத்திருவிழா கோலாகலமாக தொடங்கியது. இதற்காக அதிகாலை மீனாட்சி அம்மன் அவுதா தொட்டில் வாகனத்திலும், சுவாமி வெள்ளி சிம்மாசனத்திலும் பஞ்ச மூர்த்திகளுடன் எழுந்தருளி மதுரை மாரியம்மன் தெப்பக்குளம் பகுதியில் அமைந்துள்ள மரகதவல்லி முக்தீஸ்வரர் கோயிலுக்கு வந்தடைந்தார்.

வண்ண விளக்குகளால் ஜொலித்தது. மதுரை மீனாட்சியம்மன் தெப்பத்திருவிழா தெப்ப தேரிலிருந்து வலம்வந்த பின்னர் தெப்பக்குளம் பகுதியில் உள்ள முக்தீஸ்வரர் கோவிலின் வெளியே தங்ககுதிரை வாகனத்தில் சுந்தரேஸ்வரர் பிரியாவிடையுடனும், மீனாட்சி அம்மன் தனி பல்லக்கிலும் எழுந்தருளி தெப்பக்குளம், காமராஜர் சாலை, முனிச்சாலை, கீழவாசல், விளக்குத்தூண் ஆகிய பகுதிகளில் பக்தர்களுக்கு அருள் பாலித்தபடி சென்று மீண்டும் மீனாட்சியம்மன் கோவிலுக்கு எழுந்தருளினர். இந்த தெப்ப உற்சவத்தின்போது மட்டும் தான் சுவாமியும், அம்மனும் வெள்ளி சிம்மாசனத்தில் எழுந்தருளினாலும் கூட சுவாமியை விட அம்மன் கூடுதலாக ஒரு வாகனமான அவுதா தொட்டி வாகனத்தில் எழுந்தருளுவார் என்பது கூடுதல் சிறப்பு.

தெப்பகுளத்தில் நீர்நிரம்பி இருப்பதால் தெப்பத்திலும் தீயணைப்புத்துறையினர், காவல் துறையினர் படகு மூலம் ரோந்து பணியில் ஈடுபட்டனர். பக்தர்களின் பாதுகாப்பிற்காக மாநகர காவல் ஆணையர் லோகநாதன் தலைமையில் 300க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். இரவில் நடைபெற்ற தெப்பத் திருவிழாவை முன்னிட்டு தெப்பத்தை சுற்றிலும் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டதோடு பௌர்ணமி நிலா வெளிச்சத்தில் சுவாமியும் அம்மனும் எழுந்தருளிய தெப்பதேர் மற்றும் மைய மண்டபம் முழுவதிலும் வண்ண விளக்குகளால் ஜொலித்தது.