Add Listing
மதுரையில்

மதுரையில் ரூ.7.12 கோடியில் பெண் போலீஸ் தங்கும் விடுதி; முதல்வர் ஸ்டாலின் திறப்பு

  • 14 Feb 2026
  • 264
  • LOCAL EVENTS

மதுரை: பணிநிமித்தமாக மதுரை வரும் பெண் போலீசார், எஸ்.ஐ. இன்ஸ்பெக்டர்கள் தங்க ரூ.7.12 கோடியில் நான்கு மாடிகளை கொண்ட விடுதியை முதல்வர் ஸ்டாலின் காணொலியில் திறந்து வைத்தார்.

தல்லாகுளம் போலீஸ் ஸ்டேஷன் பின்புறம் அமைந்துள்ள இவ்விடுதியில் மொத்தம் 109 படுக்கை வசதி உள்ளது. கேண்டீன் வசதியும் ஏற்படுத்தப்பட உள்ளது. தங்குவதற்கு பராமரிப்பு நிதியாக குறைந்த கட்டணம் வசூலிக்கப்பட உள்ளது. திறப்பு விழாவில் துணைகமிஷனர்கள் மதிவாணன், இனிகோ திவ்யன், ராஜேஸ்வரி, வனிதா, திருமலைக் குமார், உதவிகமிஷனர்கள் சசிப்ரியா, சந்திரலேகா, முத்தரசு, காவலர் வீட்டு வசதி கழக செயற்பொறியாளர் ஜேம்ஸ் பங்கேற்றனர்.