Add Listing
'என்

'என் ஊரு, என் கனவு' இன்று கருத்து கேட்பு

  • 03 Feb 2026
  • 264
  • LOCAL EVENTS

மதுரை: தமிழகத்தின் வளர்ச்சிக்காக மக்களிடம் கருத்து கேட்கும் நோக்கில் உங்க கனவை சொல்லுங்க' திட்டம் அரசால் தொடங்கப்பட்டது. 2030ல் மாநிலம் எப்படி இருக்க வேண்டும் என்ற பொதுமக்களின் கனவை அரசு கேட்டறிந்து வருகிறது.

இத்திட்டத்தின் கீழ் 'என் ஊரு என் கனவு' என்ற தலைப்பில் மதுரையில் இன்று (பிப்.3) காலை 10:00 மணிக்கு ரிங் ரோடு பப்பீஸ் ஓட்டலில் கருத்துக் கேட்பு நிகழ்ச்சி நடக்கிறது. சுகாதாரம், விவசாயம், ஊரக வளர்ச்சி, அறநிலையத்துறை அலுவலர்கள் பங்கேற்கின்றனர். அதிகாரிகள் அதை அறிக்கையாக அரசிடம் சமர்ப்பிக்க உள்ளனர். அனைத்து மாவட்ட மக்களிடமும் கருத்துக்களை பெற்று பிப்சுக்குள் தமிழகத்தின் எதிர்கால வளர்ச்சி திட்டத்தை முதல்வர் வெளியிடுவார் என அதிகாரிகள் தெரிவித்தனர்.