பிப்ரவரி மாத சம்பளத்தில் அலவன்சுகள் கிடையாது ரயில்வே தொழிற்சங்கங்கள் கண்டனம்
- 24 Feb 2026
- 264
- LOCAL EVENTS
மதுரை: ரயில்வே ஊழியர் களுக்கான பிப்ரவரி மாத சம்பளத்தில் வழக்கமாக வழங்கப்படும் அல வன்சுகள் வழங்கப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ள தற்கு எஸ்.ஆர்.எம்.யூ. மற்றும் டி.ஆர்.இ.யூ. தொழிற்சங்கங்கள் கண் டனம் தெரிவித்துள்ளன.
ரயில்வே ஊழியர் களுக்கு அடிப்படை சம்பளத்துடன் பல்வேறு அலவன்சுகள் வழங்கப்படுகின்றன. குறிப்பாக லோகோ பைலட், குட்ஸ் கார்டு, ஸ்டேஷன் மாஸ்டர் போன்றோருக்கு இரவு நேரப்படி, பயணப்படி, ஓவர் டைம், கி.மீ., அலவன்சுகள் வழங்கப் படுகின்றன.இந்நிலையில் மதுரை கோட்டத்தின் மூத்த நிதி மேலாளர், மூத்த கோட்ட ஊழியர் நல அலுவலருக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், நடப்பு நிதியாண்டுக்கான பட்ஜெட் ஒதுக்கீடு, செலவினங்களுடன் ஒப் பிடுகையில் அதிகம் இருப்பதால் தலைமையகத்தின் உத்தரவுப்படி பயணப்படி, மருத்துவ செலவை ஈடுசெய்தல் உள்ளிட்ட பல்வேறு அலவன்சுகள் பிப்ரவரி மாத சம்பளத்துடன் சேர்க்கப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது
இதற்கு ரயில்வே தொழிற்சங்கங்கள் கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளன. எஸ்.ஆர்.எம்.யூ.கோட்டச் செயலாளர் ரபீக், உதவிக் கோட்டச் செயலாளர் ராம்குமார் கூறுகையில், 'ஓடும் தொழிலாளர்களுக்கு கி.மீ, அலவன்ஸ் என்பது சம்பளத்தின் ஒருபகுதி எவ்வளவு கி.மீ. ஓட்டினாலும் அதற்கான அலவன்ஸை நிறுத்தினால் பணிக்கு வராமல் இஷ்டப்படி விடுப்பு எடுத்துக் கொள்வர் இதனால் ரயில்களை இயக்குவதில் சிக்கல் ஏற்படும். எனவே நிறுத்திய அலவன்சுகளை வழங்காவிட்டால் போராட்டங்கள் நடத்தப்படும்' என்றனர். டி.ஆர்இயூ. கோட்ட ஒருங்கிணைப்பாளர் சங்கரநாராயணன் கூறுகை யில், ஜனவரி முதல் மார்ச் வரை வருமான வரி பிடித்தம் நடைபெறும். இந்நிலையில் அல வன்சுகளை நிறுத்தி யுள்ளது தொழிலாளர் களுக்கு பேரிடியாக அமைந்துள்ளது. பொது மேலாளர் தலையிட்டு மதுரை கோட்டத்திற்கு தேவையான நிதியை வழங்கி தொழிலாளர்களின் மன அழுத்தத்தை போக்க வேண்டும்" என்றார்
Add Listing