Add Listing
தனித்துவ

தனித்துவ அடையாள எண் ஆய்வு

  • 25 Feb 2026
  • 264
  • LOCAL EVENTS

மதுரை: வேளாண் துறை சார்பில் பிரதமரின் விவசாயிகளுக்கான தனித்துவ அடையாள எண் வழங்கும் பணி ஆய்வு மதுரை மேற்கு வட்டாரத்தில் நடந்தது. மாவட்ட கண்காணிப்பு அலுவலர் திருமலைக்குமார், வேளாண்மை இணை இயக்குநர் முருகேசன் ஆய்வு செய்தனர்

முருகேசன் கூறியதாவது: மதுரை மாவட்டத்தில் உள்ள ஒரு லட்சத்து 25 ஆயிரத்து 62 விவசாயிகளில் 91 ஆயிரத்து 11 பேர் பிரதமரின் தனித்துவ அடையாள எண் பெற்றுள்ளனர். இன்னும் 34 ஆயிரத்து 51 பேர் அடையாள எண் பெற வேண்டியுள்ளது. அடையாள எண் இல்லாவிட்டால் விவசாயிகளுக்கான பிரதமரின் ஊக்கத்தொகை கிடைக்காது என்பதால் பிப். 26 வரை சிறப்பு முகாம் நடக்கிறது.

நிலத்தின் கம்ப்யூட்டர் சிட்டா, ஆதார் எண், அதனுடன் இணைக்கப்பட்ட அலைபேசி எண்ணுடன் அருகிலுள்ள பொது இ-சேவை மையம், உதவி இயக்குனர் அலுவலகங்களை தொடர்பு கொள்ளலாம் என்றார். உதவி இயக்குனர்கள் பரமேஸ்வரன், பாலமுருகன், வேளாண்மை அலுவலர் மூர்த்தி உடனிருந்தனர்.