அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தம்; அக்ரி தொழிற்சங்கம் வரவேற்பு
- 09 Feb 2026
- 264
- BUSINESS NEWS
மதுரை: 'தொலைநோக்கு, ராஜதந்திரத்தின் மூலம் அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தம் செய்துள்ளார் பிரதமர் மோடி' என மதுரை அக்ரி தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.
மதுரை அக்ரி மற்றும் அனைத்து தொழிற் சங்கத் தலைவர் ரத்தினவேலு கூறியதாவது: அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தை மூலம் இந்தியப் பொருட்களின் இறக்குமதிக்கு அமெரிக்கா விதித்த வரியை 50 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக குறைத்துள்ளார் பிரதமர் மோடி. இந்தியாவுடனான வரியை அமெரிக்கா உயர்த்தியபோது, எதிர்பிரசாரம் செய்யாமல் அதிபர் டிரம்புடன் சாமர்த்திய, அமைதி பேச்சுவார்த்தை மூலம் வெற்றி பெற்றுள்ளார் பிரதமர். உலக வர்த்தகத்தில் நெருக்கடி தருணத்தில், இந்திய ஏற்றுமதியாளர்களுக்கு கிடைத்த பெரும் வெற்றி.
விவசாயம் மற்றும் உணவு பதப்படுத்தும் துறைகளுக்கு வரி குறைப்பு உதவியாக இருக்கும். இத்துறையில் வேலைவாய்ப்பு உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. உள்நாட்டு அரிசி, கோதுமை, பால் பொருட்கள், சர்க்கரை போன்றவை அமெரிக்க போட்டியில் இருந்து முழுமையாக பாதுகாக்கப்பட்டுள்ளன. மிளகு, மஞ்சள், ஜீரகம், ஏலக்காய் போன்றவை அமெரிக்க சந்தையில் போட்டியை வெற்றிகரமாக எதிர்கொள்ளும், பிரதமரின் ராஜதந்திர நடவடிக்கையால் வர்த்தகம், தொழில்துறை, விவசாயிகள், ஏற்றுமதியாளர்களுக்கு நிம்மதி ஏற்பட்டுள்ளது. இவ்வாறு கூறினார்.
Add Listing