Add Listing
புத்தகத்திற்கும்

புத்தகத்திற்கும் பெற்றோருக்கும் தொடர்புடைய பாடத்திட்டம் கருத்துக் கேட்பு கூட்டத்தில் ஆலோசனை.

  • 05 Feb 2026
  • 264
  • SCHOOL NEWS

மதுரை: புத்தகங்கள், பெற்றோருக்கு இடையே தொடர்பை ஏற்படுத்தும் வகையில் புதியபாடத் திட்டங்கள் அமைய வேண்டும்' என புதிய பாடத்திட்டத்திற்கான வரைவு பாடத்திட்டம் தயாரிப்பு குறித்த மண்டல அளவிலான ஆலோசனைக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

மதுரை உலகத் தமிழ்ச் சங்கத்தில், புதிய பாடத் திட்டங்கள் மறுவடிவமைப்புக் குழு தலைவர் சுல்தான் அகமது இஸ்மாயில் தலைமையில் இக்கூட்டம் நடந்தது. சி.இ.ஓ. தயாளன் வரவேற்றார். எஸ்.சி.இ.ஆர்.டி, இயக்குநர் லதா, இணை இயக்குநர்கள் ராமகிருஷ்ணன், புகழேந்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர். மதுரை, திண்டுக்கல், தேனி, ராமநாதபுரம், சிவகங்கை மாவட்ட ஆசிரியர்கள். மாணவர்கள், ஆசிரியர் சங்க நிர்வாகிகள் பங்கேற்றனர். ஆறு முதல் பிளஸ் 2 வரை மறுவடிவம் செய்ய வேண்டிய பாடத்திட்டம் குறித்து அவர்கள் பேசுகையில் தற்போது ஆசிரியர் - மாணவருக்கும் தொடர்புடைய பாடத்திட்டமாக உள்ளது. இதை பெற்றோருக்கும், புத்தகங்களுக்கும் இடையே தொடர்புடையதாக உருவாக்க வேண்டும். ஆங்கிலத்தில் மனப்பாடம் பகுதி பாடல்கள் நீண்ட வரிகளை கொண்டுள்ளன. மாணவர்களுக்கு எழுத்துப் பயிற்சியை ஊக்குவிக்க வேண்டும் என வலியுறுத்தினர்.

சுல்தான் அகமது இஸ்மாயில் பேசுகையில் கல்லுாரி பேராசிரியர் இன்றி இந்த புதிய பாடத் திட்டங்கள் முழுவதும் பள்ளி ஆசிரியர்களை கொண்டே தயாரிக்கப்படுகின்றன. அனைத்து ஆலோசனைகளும் கவனத்தில் கொள்ளப்படும் என்றார்.