Add Listing
மதுரையில்

மதுரையில் பசுமை மாரத்தான் போட்டி

  • 16 Feb 2026
  • 264
  • LOCAL EVENTS

திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் தியாகராஜர் பொறியியல் கல்லுாரி (டி.சி.இ.) சார்பில் 'பசுமை மதுரை மாரத்தான்' நேற்று நடந்தது.

கழிவுகளை மறுசுழற்சி செய்வதன் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் நடத்தப்பட்ட இதனை, தியாகராஜர் கல்லுாரி தலைவர் உமா கண்ணன் தொடங்கி வைத்தார். டி.சி.இ. முதல்வர் அசோக்குமார் முன்னிலை வகித்தார். அப்போலோ மருத்துவமனை டாக்டர் ஜான் எட்மன்ட் பென்னி, உதவி கமிஷனர் சசிபிரியா பங்கேற்றனர்.

சிறப்பு பிரிவுகளான 2 கி.மீ., துார தாய், குழந்தைகள் பிரிவில் 131 பேர், 3 கி.மீ. பெண்கள், மூத்த குடிமக்கள் பிரிவில் 402 பேர், 5 கி.மீ., 12 - 18 வயது இளையோர் பிரிவில் 191 பேர், 7 கி.மீ. 35-60 வயது ஆண்கள் பிரிவில் 131 பேர், 10 கி.மீ, பொதுப் பிரிவில் 573 பேர் பங்கேற்றனர். வென்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. டி.சி.இ. அசோசியேட் டீன் பிரசன்னா தலைமையில், உதவி உடற்கல்வி இயக்குநர் மஹாசுரன், பேராசிரியர்கள் கார்த்திக், தேவராஜன் ஏற்பாடு செய்திருந்தனர்.