Add Listing
கல்லுாரியில்

கல்லுாரியில் வளாகத் தேர்வு

  • 22 Feb 2025
  • 264
  • COLLEGE NEWS

மதுரை: மதுரை கே.எல்.என்., பாலிடெக்னிக் கல்லுாரியில் பெங்களூரு சென்டம் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் சார்பில் மாணவர்களுக்கு வளாகத் தேர்வு நடந்தது. செயலாளர் கே.பி. ராதாகிருஷ்ணன் தலைமை வகித்தார். முதல்வர் ஆனந்தன் வரவேற்றார்.

எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ், மெக்கானிக்கல் பிரிவைச் சேர்ந்த மாணவர்கள் தேர்வு எழுதினர். நிறுவன அதிகாரிகள் அம்சித், விஜயராகவன் தேர்வினை நடத்தினர். 28 மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். துணை முதல்வர் சகாதேவன், துறைத் தலைவர்கள் ஆதிராஜன், ஜெயலட்சுமி, பேராசிரியர்கள் சிவனேசன், சாந்தி ஏற்பாடுகளை செய்தனர்.