லாரி மீது கார் மோதல் டிரைவர் பலி
- 21 Mar 2025
- 264
- LOCAL EVENTS
அழகர்கோவிலில் தரிசனம்முடித்து காரில் திரும்பியபோது நத்தம் பறக்கும் பாலத்தில் பஞ்சராகி நின்ற லாரி மீது மோதியதில் டிரைவர் பலியானார். சென்னையைச் சேர்ந்த 6 பேர் காயமுற்றனர்.சென்னையைச் சேர்ந்த 6 பேர் கொண்ட குடும்பத்தினர் மதுரை வந்து வாடகை காரில் நேற்று காலை அழகர்கோவில் சென்றனர். காரை மதுரை காமராஜபுரம் மதியழகன் 38, ஓட்டினார்.
அங்கு தரிசனம் முடித்து மதியம் 2:00 மணிக்கு மதுரை நோக்கி நத்தம் பறக்கும் பாலத்தில் திரும்பினர். ரிசர்வ்லைன் அருகே கார் வேகமாக வந்த போது பாலத்தில் நடுவில் செங்கல் லாரி ஒன்று பஞ்சராகி நின்றது.
காரில் பயணித்த 2 குழந்தைகள் உட்பட 6 பேர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். விபத்து நடந்ததும் காரின் 'ஏர் பேக்' செயல்பட்ட போதும் மதியழகன் இறந்துள்ளார். தல்லாகுளம் போக்குவரத்து குற்றப்புலனாய்வு போலீசார் விசாரிக்கின்றனர்.