Add Listing
வேளாண்

வேளாண் மாணவிகள் பயிற்சி

  • 24 Feb 2026
  • 264
  • COLLEGE NEWS

வாடிப்பட்டி வாடிப்பட்டியில் மதுரை வேளாண் கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிலைய இறுதியாண்டு மாணவிகள் ஊரக வேளாண்மை பணி அனுபவ திட்டத்தில் தங்கி பயிற்சி பெறுகின்றனர்.

இப்பகுதி விவசாயிகளுக்கு நெற்பயிரில் இலை சுருட்டு பூச்சி மற்றும் தண்டு துளைப்பான் கட்டுப்பாட்டிற்காக வேம்பு விதை கருசாறு தயாரிப்பு மற்றும் தெளிப்பு முறைகள் குறித்து மாணவி சுருதி தங்கச்சி பயிற்சியளித்தார். உலர்த்திய வேம்பு விதை கருக்களை பொடியாக்கி 12 மணி நேரம் தண்ணீரில் ஊறவைத்து, வடிகட்டி சிறிதளவு சோப்பு கரைசல் சேர்த்து காலை அல்லது மாலையில் சமமாக தெளிக்க வேண்டும்.

இம்முறையால் நெற் பயிரில் இயற்கையான முறையில் பூச்சிகளை கட்டுப்படுத்தலாம். ரசாயன பூச்சிக்கொல்லி பயன்பாட்டையும், செலவையும் குறைத்து சுற்றுச்சூழலை பாதுகாக்கலாம் என மாணவி விவசாயிகளுக்கு விளக்கினார்.