சூரியகாந்தியுடன் ஒரு 'செல்பி'
- 23 Feb 2026
- 264
- LOCAL EVENTS
உசிலம்பட்டி: உசிலம்பட்டி அருகே நக்கலப்பட்டி கிராமத்தில் இந்தாண்டு பருவமழை பின்தங்கியதால் குறைவான நீரில் விளையும் சூரியகாந்தி பயிர்களை 5 ஏக்கருக்கும் மேலான பரப்பளவில் விவசாயிகள் சாகுபடி செய்துள்ளனர்.
பூத்து காய்கள் பிடிக்கும் பருவத்திற்கு வந்துள்ள சூரியகாந்தி செடிகள் மஞ்சள் போர்வை போர்த்தியது போல காட்சிதருகிறது. மதுரை - தேனி தேசிய நெடுஞ்சாலையோரத்தில் அமைந்துள்ளதால் அந்த வழியாக வாகனங்களில் வருபவர்கள் சூரியகாந்தி பூக்களுடன் 'செல்பி எடுத்தும் செல்கின்றனர்.
Add Listing