காவிரி கூட்டுக் குடிநீர்க் குழாயில் உடைப்பு: குடிநீர் வீண்
- 10 Feb 2025
- 264
- LOCAL EVENTS
கமுதியில் காவிரி கூட்டுக் குடிநீர்த் திட்டக் குழாயில் உடைப்பு ஏற்பட்டு, குடிநீர் சாலையில் பெருக்கெடுத்து விணாக ஓடுகிறது. ராமநாதபுரம் மாவட்டம், கமுதி, இதைச் சுற்றியுள்ள 220-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு காவிரி கூட்டுக் குடிநீர்த் திட்டத்தின் கீழ், வாரத்துக்கு இரு நாள்கள் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. கமுதி-மதுரை சாலையில் குண்டாறு பாலம் அருகே குழாயில் உடைப்பு ஏற்பட்டு, ஞாயிற்றுக்கிழமை காலை முதல் பல்லாயிரக்கணக்கான லிட்டர் தண்ணீர் சாலையில் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால், கிராமங்களுக்கு முறையாக குடிநீர் கிடைக்காததால் பொதுமக்கள் அவதி அடைந்துள்ளனர்