10வது நாளாக பேராசிரியர்கள் உள்ளிருப்பு போராட்டம் பிப்.,7 ல் மறியலில் ஈடுபட முடிவு
- 05 Feb 2026
- 264
- LOCAL EVENTS
மதுரை தமிழகத்தில் அரசு உதவி பெறும் கல்லுாரிகளில் உதவி, இணைப் பேராசிரியர்களுக்கு அளிக்கப்பட்ட பதவி உயர்வுக்கான சம்பள உயர்வு வழங்கக் கோரி 10 வது நாளாக கல்லுாரிகளில் பேராசிரியர்கள் உள்ளிருப்பு போராட்டங்களில் ஈடுபட்டனர்.
அரசு, உதவிபெறும் கல்லுாரிகளில் பணியாற்றும் உதவி பேராசிரியர்களுக்கு பதவி உயர்வுக்கான (பணிமேம்பாடு) உத்தரவு 2021ல் வெளியிடப்பட்டது. அரசு கல்லுாரிகளில் பதவி உயர்வு வழங்கி அதற்கான சம்பள உயர்வு அளிக்கப்பட்டது. ஆனால் கோவை, தஞ்சை மண்டலங்கள் தவிர மதுரை உள்ளிட்ட மண்டலங்களின் உதவிபெறும் கல்லுாரிகளில் பணியாற்றும் ஆயிரக்கணக்கான பேராசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்கிய நிலையில், அதற்கான சம்பள உயர்வு வழங்கவில்லை. இதனால் பணப்பலன் பாதிப்புடன், யு.ஜி.சி. வழிகாட்டுதல்படி கூடுதல் எண்ணிக்கையில் பிஎச்.டி., மாணவர்களை சேர்க்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.
இதனால் மாணவர்களும் பாதிக்கின்றனர். இதை கண்டித்து மாநில அளவில் 150க்கும் மேற்பட்ட உதவிபெறும் கல்லுாரிகளில் 10 நாட்களாக பாதிக்கப்பட்ட பேராசிரியர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மதுரை மண்டலத்தில் 50க்கும் மேற்பட்ட உதவிபெறும் கல்லூரிகளில் இப்போராட்டம் நடக்கிறது. பேராசிரியர்கள் கூறுகையில், 'இதுவரை 42 போராட்டங்கள் நடந்துள்ளன. மாலை வரை மாணவர்களுக்கு பாடம் நடத்திய பின் இரவு கல்லுாரிக்குள் அமர்ந்து போராட்டம் செய்கிறோம். பிப்.7 ல் மறியல் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது என்றார்.
Add Listing