உணவு திருவிழா
- 20 Feb 2026
- 264
- LOCAL EVENTS
திருமங்கலம்: திருமங்கலம் வட்டார வேளாண் துறை சார்பில் திரளி ஊராட்சி கட்ராம்பட்டியில் உணவுத் திருவிழா நடந்தது. இதில் சிறுதானியங்களும், சிறுதானியங்களில் இருந்து மதிப்பு கூட்டப்பட்ட உணவு வகைகளும் காட்சிப்படுத்தப்பட்டன.
நிகழ்ச்சிக்கு மதுரை வேளாண் இணை இயக்குனர் முருகேசன் தலைமை வகித்தார். வட்டார வேளாண் உதவி இயக்குனர் மயில் வரவேற்றார். துணை இயக்குனர் ராணி, வேளாண் கல்லூரி உதவி பேராசிரியர் ஜோதிலட்சுமி பேசினர். 200க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர். வேளாண் அலுவலர் நரேஷ்குமார் நன்றி கூறினார். அனைத்து விவசாயிகளுக்கும் சிறு தானியங்களில் தயாரிக்கப்பட்ட மதிய உணவு வழங்கப்பட்டது.
Add Listing