Add Listing
ஓட்டுனர்களுக்கு

ஓட்டுனர்களுக்கு பாராட்டு

  • 05 Mar 2026
  • 264
  • LOCAL EVENTS

மதுரை மண்டல தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் திருமங்கலம் கிளையில் சாலைப்பாதுகாப்பு விழா நடந்தது.மேலாண் இயக்குனர் சரவணன் தலைமை வகித்தார். விபத்தில்லாமல் பஸ்களை இயக்கிய 50 ஓட்டுனர்களுக்கும், அதிக டீசல் சேமிப்பு வழங்கிய 35 ஓட்டுனர்களுக்கும், சிறப்பாக பணியாற்றிய 23 அலுவலர்களுக்கும், 17 தொழில்நுட்ப பணியாளர்களுக்கும் பரிசு வழங்கினார்

அவர் பேசுகையில், 'தொழில் முறை ஓட்டுனர்களான ஒவ்வொருவருக்கும் முழுப்பொறுப்பு உள்ளது. போக்குவரத்துக் கழகத்தை விபத்தில்லாத கழகமாக மாற்ற அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்' என்றார்.

பொதுமேலாளர்கள் மணி, கோபாலகிருஷ்ணன், ஆர்.டி.ஓ, கார்த்திகேயன், போலீஸ் இன்ஸ்பெக்டர் கோபு பங்கேற்றனர் அசோக் லேலண்ட் நிறுவனத்தின் சாய்சுப்ரமணியன், குரு உட்பட பலர் பங்கேற்றனர்.