டேக்வாண்டோ: பள்ளி சாதனை
- 16 Feb 2026
- 264
- LOCAL EVENTS
சோழவந்தான்: சோழவந்தான் நகரி கல்வி இன்டர்நேஷனல் பப்ளிக் பள்ளி மாணவர்கள் மாவட்ட டேக்வாண்டோ போட்டியில் 52 பதக்கங்களை கைப்பற்றி சாம்பியன்ஷிப் பட்டத்தை தட்டிச் சென்றனர்.
கோச்சடை குயின் மீரா சர்வதேச பள்ளியில் மாவட்ட டேக்வாண்டோ சாம்பியன்ஷிப் 2026 போட்டி நடந்தது. இதில் கல்வி பள்ளி சார்பில் 52 மாணவர்கள் பங்கேற்று 29 தங்கம், 9 வெள்ளி, 14 வெண்கலம் உட்பட 52 பதக்கங்களை வென்றனர்.பங்கேற்ற அனைத்து மாணவர்களும் பதக்கம் பெற்றது குறிப்பிடத்தக்கது. வென்ற மாணவர்களை பள்ளித் தலைவர் செந்தில்குமார், முதல்வர், ஆசிரியர்கள், பெற்றோர் வாழ்த்தினர்.
Add Listing