திருநகர் மங்கம்மாள் சாலை புதுப்பிக்கப்பட்டது – நீண்டநாள் கோரிக்கை நிறைவேற்றம்
- 27 Oct 2025
- 264
- LOCAL EVENTS
திருநகர்: திருநகர் மங்கம்மாள் சாலை நீண்டநாட்களாக மோசமான நிலையில் இருந்து, பொதுமக்களுக்கு பெரும் சிரமத்தை ஏற்படுத்தி வந்தது. குறிப்பாக, குடிநீர் குழாய்கள் பதிக்கும் பணிக்காக சாலை தோண்டப்பட்ட பகுதிகள் சரியாக சீரமைக்கப்படாமல் இருந்ததால், மழை பெய்தால் தண்ணீர் தேங்கி, சாலையில் பயணிக்கும் இருசக்கர வாகன ஓட்டிகள் மற்றும் நடமாடும் பொதுமக்கள் பலர் அவதியுற்றனர்.
மேலும், சாலையின் பல இடங்களில் ஆழமான பள்ளங்கள் உருவாகி, வாகனங்கள் செல்ல முடியாத அளவுக்கு சாலையின் நிலைமை பாதிக்கப்பட்டது. இதுகுறித்து தினமலர் செய்தி வெளியானதைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு, மங்கம்மாள் சாலையில் புதுப்பிப்பு பணிகளை தொடங்கினர்.
தற்போது அந்த சாலை முழுமையாக சீரமைக்கப்பட்டு, புதிதாக தார் பூச்சு இடப்பட்டுள்ளதால், பொதுமக்கள் நிம்மதியடைந்துள்ளனர்.
Add Listing