Add Listing
விவேகானந்தர்

விவேகானந்தர் சிலைக்கு மரியாதை

  • 03 Feb 2026
  • 264
  • LOCAL EVENTS

மதுரை: மதுரை கல்லுாரி மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் சுவாமி விவேகானந்தர் மதுரை வருகை தினவிழா நடந்தது. தலைமை ஆசிரியர் பாலாஜி ராம், யோகா ஆசிரியர் அர்ஜுன் சிங் விவேகானந்தர் சிலைக்கு மாலை அணிவித்தனர்.

நேதாஜி சுவாமிநாதன் முன்னிலை வகித்தார். சீனிவாசன் வாழ்த்தினார். பத்தாயிரம் மரக்கன்றுகள் நட்டு தன் வாழ்நாளில் சாதனை படைத்த முன்னாள் விமான படை வீரர் வேலுச்சாமி பிறந்தநாள் நற்பணி உறுதிமொழியை மாணவர்கள் ஏற்றனர். மாணவர்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.