போக்சோ வழக்குகளை விசாரிக்கும் நீதிபதிகளுக்கு சிறப்பு பயிற்சி வழங்க உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியது.
- 14 Oct 2025
- 264
- CRIME & SAFETY NEWS
மதுரை: போக்சோ சட்டத்தின் கீழ் நடைபெறும் வழக்குகளில், குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்ட நாளிலிருந்து 30 நாட்களுக்குள் பாதிக்கப்பட்ட குழந்தையின் சாட்சியத்தை பதிவு செய்ய வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. போக்சோ வழக்குகள் நீண்டுநிலுவையில் இருப்பதை நீதிமன்றம் கடும் கவலைக்குரியதாகக் குறிப்பிட்டது. இதனைத் தடுக்க, அனைத்து போக்சோ சிறப்பு நீதிமன்ற நீதிபதிகளுக்கும் தமிழ்நாடு நீதித்துறை அகாடமி இயக்குனர் சிறப்பு பயிற்சி வழங்க வேண்டும் என்றும் தெரிவித்தது.
மேலும், குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டவுடன் வழக்குகளை உடனடியாக விசாரணைக்கு எடுத்துக்கொண்டு தாமதமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் உயர்நீதிமன்றம் வலியுறுத்தியது.
போக்சோ சட்டத்தின் விதிகளை முழுமையாகப் பின்பற்றுவதற்காக நீதிபதிகளுக்கு நினைவூட்டும் சுற்றறிக்கை அனுப்புமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டது.
Add Listing