ஜே.இ.இ, தேர்வில் மாணவர்கள் சாதனை
- 18 Feb 2026
- 264
- SCHOOL NEWS
மதுரை: ஐ.ஐ.டி, ஜே.இ.இ, தேர்வில் கோவில்பாப்பாகுடி மகரிஷி வித்யா மந்திர் மெட்ரிக் பள்ளி மாணவர்கள் அதிக மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளனர்.
ஜே.இ.இ. மெயின்ஸ் 2026 தேர்வில் மாணவர் சத்யஜித் 98.4 சதவீதம் மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளார். மாணவி சாதனா 97.6 சதவீதமும், மாணவர் விஜய் ஹரிஷ் 97.5 சதவீதமும் மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளனர். இப்பள்ளியைச் சேர்ந்த 20 மாணவர்கள் ஐ.ஐ.டி, அட்வான்செட் தேர்வுக்கு தகுதி பெற்றுள்ளனர். வெற்றிபெற்ற மாணவர்களை பள்ளி தலைவர் வடிவேலு, நிர்வாகத்தினர், ஆசிரியர்கள் பாராட்டினர்.
Add Listing