நாளை மதுரை தெப்ப திருவிழா
- 31 Jan 2026
- 264
- LOCAL EVENTS
மதுரை, தெப்பத் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான சுவாமி, அம்மன் தெப்பத்தில் வலம் வரும் தெப்போத்ஸவம் நாளை நடைபெற உள்ளது.
மதுரை வண்டியூர் மாரியம்மன் தெப்பக்குளத்தில் ஆண்டுதோறும் தை மாதத்தில் (ஜனவரி-பிப்ரவரி) பௌர்ணமியன்று நடைபெறும் உலகப்புகழ்பெற்ற திருவிழா, மன்னர் திருமலை நாயக்கரால் 17-ம் நூற்றாண்டில் தொடங்கப்பட்டது. மீனாட்சி அம்மன்-சுந்தரேஸ்வரர் தெப்பத்தில் வலம் வரும் இந்த விழா, நாயக்கர் கால கலை மற்றும் பக்தி மரபுகளை பறைசாற்றும் வகையில் 10-12 நாட்கள் விமரிசையாக கொண்டாடப்படுகிறது.
மையத்தில் உள்ள நீராழி மண்டபத்தைச் சுற்றி, மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் அம்மனும் சுவாமியும் வலம் வருவார்கள். தைப்பூச பௌர்ணமி அன்று நடைபெறும் இந்த திருவிழாவிற்கு, மீனாட்சி அம்மன் கோவிலிலிருந்து திருவாபரணங்கள் கொண்டு வரப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெறும். இதையொட்டி, நெப்பக்குளத்தில் மிதவை தெப்பம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. 300க்கும் அதிகமான தகர உருளைகள், நூற்றுக்கணக்கான கம்புகளைக் கொண்டு மிதவைத் தெப்பம் அமைக்கப்பட்டு வருகிறது. சுமார் 30 பணியாளர்கள் இந்தப் பணியை தொடர்ந்து செய்து வருகின்றனர்.
Add Listing