பிளஸ் 2 தமிழ் தேர்வு: 526 'ஆப்சென்ட்'
- 03 Mar 2026
- 264
- SCHOOL NEWS
மதுரையில் நேற்று துவங்கிய பிளஸ் 2 பொதுத் தேர்வு தமிழில் 526 மாணவர்கள் 'ஆப்சென்ட்' ஆகினர். மாவட்டத்தில் 323 பள்ளிகளை சேர்ந்த 33,565 பேர் விண்ணப்பித்து 109 தேர்வு மையங்களில் 33,036 பேர் எழுதினர். இதுதவிர மதுரை மத்திய சிறையில் தனி மையம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
முதல் நாள் தேர்வில் 236 மாணவிகள் உட்பட 526 பேர் பங்கேற்கவில்லை. இதுபோல் ஹிந்தி89, சமஸ்கிருதம் 258, பிரஞ்ச் 481, அராபிக் 91 மாணவர்கள் தேர்வு எழுதினர். தனித் தேர்வர்கள் 836 பேரில் 761 பேர் பங்கேற்றனர். 75 பேர் ஆப்சென்ட் ஆகினர், ஓ.சி.பி.எம், பள்ளியில் கலெக்டர் பிரவீன்குமார் மேற்பார்வையிட்டார்.
மாவட்ட நோடல் அதிகாரியான இணை இயக்குநர் மார்ஸ் முதல் தேர்வின் போது மதுரையில் இல்லை சி.இ.ஓ.தயாளன் தலைமையில் பறக்கும்படை குழு உட்பட தேர்வு மையங்களில் கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
Add Listing