இலவச மருத்துவ முகாம்
- 03 Mar 2026
- 264
- HEALTH NEWS
மதுரை ஜெய்ஹிந்த்புரம் கோகிலா சித்த மருத்துவமனை ஆராய்ச்சி மையத்தில், அரவிந்த் கண் மருத்துவமனை, இந்திய மருத்துவ நல அறக்கட்டளை சார்பில், ரத்த சர்க்கரை அளவு, கண் விழித்திரைக்கான இலவச பரிசோதனை முகாம் நடந்தது. சர்க்கரை கட்டுப்பாட்டில் இல்லாத 110 பேருக்கு டாக்டர்கள் ஜெயவெங்கடேஷ், பவித்ரா, சமீர் சவுத்ரி, ஜீவகிரி ஆலோசனை வழங்கினர்.
சர்க்கரை நோயால் பார்வைத்திறன் பாதிக்கப்பட்ட 45 பேர், கண் நரம்புகளில் பாதிப்புள்ள 12 பேர் கண்டறியப்பட்டு சித்த மருத்துவமனை நிர்வாக அதிகாரி செந்தில்நாதன், கண் மருத்துவமனை ஒருங்கிணைப்பாளர் ராஜசேகரன் மூலம் இலவச அறுவை சிகிச்சைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
Add Listing