ரூ.5.49 லட்சம் கல்வி உதவித்தொகை வழங்கல்
- 11 Feb 2026
- 264
- LOCAL EVENTS
திருப்பரங்குன்றம்: மதுரை மன்னர் திருமலை நாயக்கர் கல்லுாரியில் திருமலை நாயக்கரின் 443வது பிறந்த நாள் விழா விஜயராகவன் -ராமலட்சுமி அறக்கட்டளை சார்பில் நடந்தது.
முதல்வர் ராமசுப்பையா தலைமை வகித்தார். கல்லுாரி தலைவர் விஜயராகவன் வரவேற்றார். கவுரவ தலைவர் ராஜகோபால், செயலாளர் ஸ்ரீதர், உபதலைவர்கள் ஜெயராம், சம்பத், உதவி செயலாளர்கள் சுரேந்திரன், ரங்கராஜ், பொருளாளர் ஆழ்வார்சாமி, சுயநிதிப் பிரிவு இயக்குநர் பிரபு முன்னிலை வகித்தனர். மாநில நல்லாசிரியர் சண்முக திருக்குமரன் 'சீர்திருத்தச் செம்மல் மன்னர் திருமலை' என்ற தலைப்பில் பேசினார்.
தாய் அல்லது தந்தை மட்டும் உள்ள அரசு உதவிப் பெறும், சுயநிதிப் பிரிவில் பயிலும் 45 மாணவ, மாணவிகளுக்கு நிதியுதவியாக ரூ. 5.49 லட்சம் வழங்கப்பட்டது. தமிழ் உயராய்வு மைய இணைப் பேராசிரியர் காயத்ரிதேவி ஒருங்கிணைத்தார். பேராசிரியர் மல்லிகா தொகுத்து வழங்கினார். மையத் தலைவர் தேவிபூமா நன்றி கூறினார். பேராசிரியர்கள் திருஞானசம்பந்தம், முனியசாமி, ஆய்வாளர்கள் மோனிகா, யாழினி, கார்த்திக்ராஜா, சுரேஷ் ஆகியோர் பங்கேற்றனர்.
Add Listing