Add Listing
மதுரையில்

மதுரையில் 'கிரடாய்' கட்டுமான நிறுவன கண்காட்சி தமுக்கத்தில் நாளை முதல் மூன்று நாட்கள்

  • 18 Nov 2025
  • 264
  • BUSINESS NEWS

மதுரை: மதுரை தமுக்கம் மைதானத்தில் 'கிரடாய்' அமைப்பு சார்பில் 'பேர்புரோ' கட்டுமான நிறுவன கண்காட்சி, நாளை (ஜன.,30) முதல் பிப்: வரை நடக்கிறது.

மதுரையின் முன்னணி கட்டுமான நிறுவனங்களின் 300க்கும் மேற்பட்ட திட்டங்கள் ஐம்பதுக்கும் மேற்பட்ட ஸ்டால்களில் காட்சிப்படுத்தப்பட உள்ளன. ரூ.3 லட்சம் முதல் ரூ.3 கோடி வரை அனைவரின் பட்ஜெட்டிற்கும் ஏற்ற வகையில் பிளாட்டுகள், வில்லாக்கள், அப்பார்ட்மென்ட்டுகள், வர்த்தக இடங்களை வாடிக்கையாளர்கள் தேர்வு செய்யலாம். மதுரை மட்டுமின்றி சென்னை, கோவை, திண்டுக்கல், கொடைக்கானல் ஆகிய ஊர்களிலும் கட்டுமானங்களை இங்கு புக் செய்யலாம். நிறுவனங்கள் சார்பில் 'சைட்'களுக்கு சென்று பார்வையிட வாகன வசதி உண்டு. ஏற்கனவே நிலம் வைத்திருப்பவர்கள் தங்களுக்கு ஏற்ற பில்டர்களை தேர்வு செய்து கொள்ளலாம். தினமும் குலுக்கல் முறையில் பரிசு, குழந்தைகளுக்கான பொழுதுபோக்கு அம்சங்கள், சுவைக்க ஸ்நாக்ஸ் கார்னர் கண்காட்சியில் இடம்பெறுகிறது. கிரடாய் முன்னாள் மாநில தலைவர் இளங்கோவன் கூறியதாவது: 8வது ஆண்டாக இக்கண்காட்சி நடக்கவுள்ளது. அனைத்து திட்டங்களும் டிடி.சி.பி. அப்ரூவல், ரெரா அங்கீகாரம் பெற்றவை என்பதால் 90 சதவீதம் வரை உடனடி வங்கிக்கடன் பெற முடியும். கிரடாய் அங்கீகாரம் பெற்ற நிறுவனங்கள் பங்கேற்பதால் நம்பி வாங்கலாம்.

பொருளாளர் ஜெயக்குமார், மாவட்ட தலைவர் முத்துவிஜயன், சேர்மன் ராமகிருஷ்ணா, செயலாளர் யோகேஷ், இணைச் செயலாளர் அழகப்பன் உள்ளிட்டோர் ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். ஜன, 31ல் மதுரையை துாய்மையாக வைத்துக்கொள்வதன் அவசியத்தை வலியுறுத்தும் வகையில் உலக சாதனைக்காக 1500 பள்ளி மாணவர்கள் மூலம் தூய்மை விழிப்புணர்வு நடத்தப்படவுள்ளது. அமைச்சர் மூர்த்தி, டி.டி.சி.பி. இயக்குநர் கணேசன், கலெக்டர் பிரவீன் குமார், கமிஷனர் சித்ரா, நடிகை ஆலியா மானசா உள்ளிட்டோர் கண்காட்சியை காண உள்ளனர். வாடிக்கையாளர்கள் காலை 10:00 முதல் இரவு 9:00 மணி வரை கண்காட்சியை பார்வையிடலாம். அனுமதி இலவசம்.