காந்திமியூசியத்தில் சுய வேலைவாய்ப்பு பயிற்சி
- 29 Oct 2025
- 264
- LOCAL EVENTS
மதுரை காந்தி மியூசியம் சார்பில் சுய வேலைவாய்ப்பு உருவாக்கத்தை ஊக்குவிக்கும் வகையில் சிறப்பு பயிற்சி நிகழ்ச்சி அக். 31, வெள்ளிக்கிழமை, காலை 10.30 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளது.
இந்த ஒருநாள் பயிற்சியில், குறுந்தானியங்களை அடிப்படையாகக் கொண்ட உணவுப் பொருட்கள் தயாரிப்பு, மேலும் அவற்றில் இருந்து மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் உருவாக்கம் போன்ற முக்கிய தொழில்நுட்பங்கள் மற்றும் செயல்முறைகள் விரிவாக கற்பிக்கப்படுகின்றன. இதன் மூலம், தன்னம்பிக்கை வளர்த்துக் கொண்டு சிறு அளவிலான தொழில் தொடங்க விரும்புவோருக்கு பயனுள்ளதாக அமையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பயிற்சி நிறைவில் சர்வ சமய வழிபாட்டுடன் சான்றிதழ்கள் வழங்கப்படும். கலந்து கொள்ள விரும்புவோர் தங்களின் பெயரை முன்பதிவு செய்ய காந்தி மியூசிய கல்வி அலுவலர் ஆர். நடராஜனை (தொலைபேசி எண்: 86100 94881) தொடர்பு கொள்ளலாம் என காந்தி மியூசிய செயலாளர் கே.ஆர். நந்தாராவ் தெரிவித்தார்.
Add Listing