பராமரிப்பு பணிகளால் ரயில் சேவையில் மாற்றம்
- 02 Mar 2026
- 264
- TRAFFIC&TRANSPORTATION
பராமரிப்பு பணிகளால் ரயில் சேவையில் மாற்றம் பகுதி ரத்து : மார்ச் 2 (இன்று) முதல் 30 வரை (செவ்வாய் தவிர்த்து) ஈரோடு -செங்கோட்டை (16845), மார்ச் 3 முதல் 31 வரை (புதன் தவிர்த்து) செங்கோட்டை - ஈரோடு (16846) ஆகிய ரயில்கள் திண்டுக்கல் செங்கோட்டை இடையே ரத்து செய்யப்படுகின்றன. மார்ச் 1, 4, 5ல் செங்கோட்டை - திருநெல்வேலி - செங்கோட்டை (56742/56743) ஆகிய ரயில்கள் சேரன்மகாதேவி - திருநெல்வேலி இடையே பகுதியாக ரத்து செய்யப்படு கின்றன. மார்ச் 23, 24ல் மதுரை ராமேஸ்வரம்- மதுரை (56711/56714) ஆகிய ரயில்கள் ராமநாதபுரம் ராமேஸ்வரம் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகின்றன.
மாற்றுப் பாதை மார்ச் 3 முதல் 31 வரை, புதன் தவிர்த்து மற்ற நாட்களில் செங்கோட்டை மயிலாடுதுறை (16848), ஞாயிறு, வியாழக் கிழமைகளில் நாகர்கோவில் மும்பை சி.எஸ்.எம்.டி. (16352) சனி தோறும் கன்னியாகுமரி -ஹவுரா (12666) ஆகிய ரயில்கள் மதுரை, மானாமதுரை, காரைக்குடி, திருச்சி வழியாக செல்லும். திங்கள், செவ்வாய் தவிர்த்து மற்ற நாட்களில் குருவாயூர் - சென்னை எழும்பூர் (16128). வெள்ளி தோறும் கன்னியாகுமரி -ஐதராபாத் (07229) ஆகிய ரயில்கள் மதுரை, மானாமதுரை, காரைக்குடி, திருச்சி வழியாக செல்லும். மார்ச் 14ல் கோவை - நாகர்கோவில் ரயில் (16322) கரூர், திருச்சி, காரைக்குடி, மானாமதுரை, விருதுநகர் வழியாக செல்லும்.
மார்ச் 18ல் நாகர்கோவில் கோவை - நாகர்கோவில் (16321/16322), மதுரை - குருவாயூர் (16327), செங்கோட்டை - மதுரை பாசஞ்சர் (56772), பாலக்காடு திருச்செந்தூர்-பாலக்காடு (16731/16732), திருவனந்தபுரம் திருச்சி (22628) ஆகிய ரயில்கள் மதுரை, மானாமதுரை, விருதுநகர் வழியாக இயக்கப்படும். சிறப்பு ரயில் பயணிகள் வசதிக்காக மார்ச் 3 முதல் 31 வரை (புதன் தவிர்த்து) சிறப்பு ரயில் (06846), அதிகாலை 5.10 மணிக்கு செங்கோட்டையில் இருந்து புறப்பட்டு காலை 9:30 மணிக்கு மதுரை வரும் மார்ச் 2 முதல் 30 வரை (செவ்வாய் தவிர்த்து) சிறப்பு ரயில் (06845) மாலை 6:00 மணிக்கு மதுரையில் இருந்து புறப்பட்டு இரவு 10.30 மணிக்கு செங்கோட்டை செல்லும். திருமங்கலம், விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி திருநெல்வேலி, சேரன்மகாதேவி, அம்பாசமுத்திரம், தென்காசி வழியாக செல்லும்.
Add Listing