Add Listing
தீபாவளி

தீபாவளி ஸ்பெஷல்: மதுரையில் தற்காலிக போக்குவரத்து மாற்றம் !

  • 15 Oct 2025
  • 264
  • TRAFFIC&TRANSPORTATION

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மதுரை நகரில் அக்டோபர் 15 முதல் 20 வரை தற்காலிக போக்குவரத்து மாற்றங்கள் அமல்படுத்தப்பட்டுள்ளன. ? நேதாஜி ரோடு – பெருமாள் தெப்பம் சந்திப்பு: பெருமாள் தெப்பம் சந்திப்பிலிருந்து நேதாஜி ரோடு நோக்கி வாகனங்கள் செல்ல அனுமதி இல்லை. அதற்கு பதிலாக, டவுன்ஹால் ரோடு வழியாக பயணிக்கலாம். நேதாஜி ரோட்டிலிருந்து பச்சை நாச்சியம்மன் கோயில் தெரு வழியாக பெருமாள் தெப்பம் செல்லலாம்.

? மேலமாசி வீதி – ஜான்சி ராணி பூங்கா பாதை: மேலமாசி வீதியிலிருந்து ஆரியபவன் சந்திப்பு வழியாக ஜான்சி ராணி பூங்கா செல்லும் வாகனங்கள் வழக்கம்போல் முருகன் கோயில் வழியாக செல்லலாம். ஜான்சி ராணி பார்க் முதல் முருகன் கோயில் வரை ஒரு வழிப்பாதையாக மாற்றப்பட்டுள்ளது. ? கூடலழகர் பெருமாள் கோயில் – டிபிகே ரோடு வழி: கூடலழகர் கோயில் சந்திப்பிலிருந்து மேலவடம்போக்கி தெரு வழியாக டிபிகே ரோடு செல்ல அனுமதி இல்லை. டிஎம் கோர்ட் சந்திப்பிலிருந்து ஆரியபவன் சந்திப்பு வழியாக இடதுபுறம் திரும்பி நேதாஜி ரோடு வழியாக டிபிகே ரோடு செல்லலாம்.

? கேபிஎஸ் சந்திப்பு – ஒருவழிப் பாதை மாற்றம்: கேபிஎஸ் ஹோட்டல் சந்திப்பிலிருந்து நேதாஜி ரோடு மற்றும் ஜம்ஜம் சந்திப்பிலிருந்து மேலவடம் போக்கி தெரு முழுவதும் தற்காலிகமாக ஒருவழிப் பாதையாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கேபிஎஸ் சந்திப்பிலிருந்து மேலமாசி வீதி, ஆரியபவன் சந்திப்பு வழியாக வாகனங்கள் செல்ல அனுமதி இல்லை. இந்த மாற்றங்கள் தீபாவளி கூட்டநெரிசலை தவிர்க்கவும், வாகன நெரிசலை குறைக்கவும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. பயணிகள் மாற்று வழிகளை பயன்படுத்துமாறு போக்குவரத்து துறை கேட்டுக் கொண்டுள்ளது.